Images
  • hassim
    படம்:  Facebook/Imran Kassim

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சிங்கப்பூரருக்கு 33 மாதச் சிறை

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சிங்கப்பூரருக்கு 33 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியளித்ததாக 36 வயது இம்ரான் காசிம் (Imran Kassim) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் துருக்கியில் இருக்கும் ஓர் ஆடவருக்கு 450 வெள்ளி அனுப்பியதை இம்ரான் ஒப்புக்கொண்டார்.

தாம் சிங்கப்பூர்ச் சட்டத்தை மதிக்கவில்லை என்றும், சிங்கப்பூரின் சட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் இம்ரான் கூறினார்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மட்டுமே மதிப்பதாகவும், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுவது தம்முடைய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இம்ரானுக்குப் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையோ, 500,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

பயங்கரவாதக் குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு நிதியுதவி அல்லது வேறெந்த உதவியும் வழங்கக்கூடாது என்று உள்துறை அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

Top