Images
  • gavel
    (கோப்புப் படம்: CNA)

அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களுக்கு வசிப்பிடம் அளித்த ஆடவருக்குச் சிறை

அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களுக்கு வசிப்பிடம் அளித்த ஆடவருக்கு 7 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயது ஃபெங் சியாவ்மிங் (Feng Xiaoming) ஜூரோங் வெஸ்டில் உள்ள வீட்டின் பராமரிப்பாளராகச் செயல்பட்டார்.

வீட்டில் வசித்த பெண்கள் இருவர், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் 2 மாதங்கள் வரை சிங்கப்பூரில் இருந்ததாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் சொன்னது.

பெண்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததைக் கவனிக்காத ஃபெங், அவர்களை வீட்டில் தொடர்ந்து வசிக்க அனுமதித்ததாகக் கூறப்பட்டது.

வீட்டில் வசித்த பெண்கள் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள் இருவருக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், வீட்டை வாடகைக்கு விடுவோர், குடியிருப்பாளர்களின் குடிநுழைவு அனுமதியை விரிவாகச் சோதிக்கவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ 6,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

- CNA/dv(gs)  

Top