Images
  • officer
    படம்: Jeremy Long

நீதிக்கு இடையூறாக இருந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிக்குச் சிறை

நீதிக்கு இடையூறாக இருந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி அடி-கஸாலி சுஹைமிக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முழுநேர தேசிய சேவையாளர் கொக் யுவன் சின் (Kok Yuen Chin) கிணற்றுக்குள் தள்ளப்படும் காணொளியை அவர் வேண்டுமென்றே நீக்கினார்.

அந்தக் காணொளி குற்ற விசாரணையில் உதவும் ஆதாரமாக விளங்கியது. ஸ்டாஃப் சார்ஜண்ட் அடி-கஸாலி சுஹைமி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மே மாதம், துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில், 12 மீட்டர் ஆழமான  கிணற்றில் கொக் மூழ்கி மாண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்ட 5 அதிகாரிகளில் அடி-கஸாலியும் ஒருவர்.


Top