Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'பயங்கரவாதம் சமயம் சார்ந்ததல்ல' - ஜாமியா சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முஸ்லிம் அறநிதி அமைப்பான ஜாமியா சிங்கப்பூர், கிரைஸ்ட்சர்ச் தாக்குதல் பற்றிக் கருத்துரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
'பயங்கரவாதம் சமயம் சார்ந்ததல்ல' - ஜாமியா சிங்கப்பூர்

படம்: REUTERS/Edgar Su

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் முஸ்லிம் அறநிதி அமைப்பான ஜாமியா சிங்கப்பூர், கிரைஸ்ட்சர்ச் தாக்குதல் பற்றிக் கருத்துரைத்துள்ளது.

அத்தகைய நடவடிக்கைகளுக்கு இனம், சமயம் பாராது அனைவரும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று அது சொன்னது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது நியூசிலந்து அரசாங்கம் வெளிப்படுத்திய அக்கறையை ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு வரவேற்றுள்ளது.

அத்தகைய அருவருக்கத்தக்க தாக்குதல்களை எதிர்த்து, அனைத்து சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென அது கேட்டுக்கொண்டது.

அண்மைக் காலமாக வெறுப்புணர்வால் அடிக்கடி ஏற்படும் தாக்குதல்கள், "பயங்கரவாதம் சமயம் சார்ந்ததல்ல" என்ற உண்மையைச் சமூகத்தினர் புரிந்துகொள்ளத் தூண்டவேண்டும் என்றும் அது கூறியது.

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புணர்வின் பின்னணியில், உண்மையான இஸ்லாம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்ட, முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நிற்கவேண்டுமென்றும் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு கேட்டுக்கொண்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்