Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசதிகுறைந்த இந்துக் குடும்பத்தின் வீட்டில் பண்டிகை உணர்வை ஏற்படுத்திய ஜாமியா இடைவழி இல்லத்தைச் சேர்ந்தவர்கள்

தீபாவளியை முன்னிட்டு, ஜாமியா இடைவழி இல்லத்தைச் சேர்ந்தோர், வசதிகுறைந்த இந்துக் குடும்பம் ஒன்றின் வீட்டை அலங்கரிக்க உதவியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வசதிகுறைந்த இந்துக் குடும்பத்தின் வீட்டில் பண்டிகை உணர்வை ஏற்படுத்திய ஜாமியா இடைவழி இல்லத்தைச் சேர்ந்தவர்கள்

(படம்: pixabay)

தீபாவளியை முன்னிட்டு, ஜாமியா இடைவழி இல்லத்தைச் சேர்ந்தோர், வசதிகுறைந்த இந்துக் குடும்பம் ஒன்றின் வீட்டை அலங்கரிக்க உதவியுள்ளனர்.

Project Happiness திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுக்குப் புதுப் பொலிவூட்டும் முயற்சியில் முன்னாள் சிறைக் கைதிகள் ஈடுபட்டனர்.

வீட்டுக்கு வண்ணம் பூசுதல், புதிய மின்-விசிறிகளைப் பொருத்துதல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த அந்தப் பொலிவூட்டும் முயற்சியின்கீழ், புதுக் கட்டில், வீட்டின் வரவேற்பறையில் மெருகூட்டும் பொருள்கள் போன்றவையும் இலவசமாக வழங்கப்பட்டன.

மொத்தம் 2,000 வெள்ளிக்கும் அதிகமான செலவில், வீடு புதுப்பொலிவு பெற்றது.
தங்கள் வீடு அழகுபடுத்தப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார் திருவாட்டி கோமதி சோமசுந்தரம்:

மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தர்மன் சண்முகரத்தினம் அலங்கரிக்கப்பட்ட வீட்டை நேரில் சென்று பார்வையிட்டார்.

இல்லத்தின் முயற்சி, பயன்பெற்ற குடும்பத்துக்கு மட்டுமின்றித் திட்டத்தைச் செயல்படுத்தியோருக்கும் மகிழ்ச்சி அளித்திருப்பதைத் திரு. தர்மன் சுட்டிக்காட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்