Images
  • janil ph

தானியக்க வாகனங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்: ஜனில் புதுச்சேரி

சிங்கப்பூரில் சோதிக்கப்படும் தானியக்க வாகனங்கள், பாதுகாப்பு ஓட்டுநரைக் கொண்டிருப்பது, தகவல் பதிவுப் பெட்டி பொருத்தப்பட்டிருப்பது போன்ற கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்.

போக்குவரவுக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் இன்று (ஜுலை 11) அவ்வாறு கூறினார்.

3ஆம் தரப்புச் சேதங்களுக்குப் பொறுப்பேற்பது, வாகனம் சேதமடைவது ஆகியவற்றின் தொடர்பில் காப்பீடு செய்யப்பட்டிருப்பதும் அவசியம் என்றார் அவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் (Melvin Yong), சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு டாக்டர் ஜனில் பதிலளித்தார்.

ஒன்-நார்த் (One-North), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் அறிவியல் பூங்கா ஆகிய வட்டாரங்களின் சாலைகளில் சோதித்துப் பார்ப்பதற்கு, தற்போது 14 தானியக்க வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.


Top