Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தெருக்களைச் சுத்தம் செய்யும் ஜப்பானியர்

சுற்றுப்புறம் அசுத்தமாக இருந்தால் முகம் சுளித்துவிட்டுச் செல்வோர் உண்டு.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்த் தெருக்களைச் சுத்தம் செய்யும் ஜப்பானியர்

(படம்: Ivan Choong)


சுற்றுப்புறம் அசுத்தமாக இருந்தால் முகம் சுளித்துவிட்டுச் செல்வோர் உண்டு.

ஆனால் அப்படியில்லாமல் சுற்றிப்பார்க்க வந்த இடத்தில் குப்பையை அகற்றி இணையவாசிகளின் மனத்தில் இடம்பிடித்துள்ளார் ஒரு ஜப்பானியர்.

பூன் தியோங் ரோட்டில் டோஷி என்பவர் குப்பைகளை எடுத்துப் பையில் போடுவதைக் கவனித்திருக்கிறார் ஐவன் சூங்.

ஜப்பானிலிருந்து வந்திருப்பதாகவும் அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் டோஷி அவரிடம் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் சுத்தமாகவும் பசுமையாகவும் இருக்கிறது. அதனால் எங்காவது கொஞ்சம் குப்பையைப் பார்த்தாலும் அதனைச் சுத்தப்படுத்தவேண்டும் எனத் தோன்றுவதாக டோஷி கூறியிருக்கிறார்.

டோஷியின் செயலைப் பற்றி சூங் Facebookஇல் பதிவு செய்தார்.

இதுவரை 11,000 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6,000 பேர் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளனர்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்