Images
  • Sangiang
    (படம்: Basarnas)

ஜாவா தீவில் காணாமற்போன சிங்கப்பூர் முக்குளிப்பாளரைத் தேடும் பணி நீட்டிப்பு

இந்தோனேசியாவின் சாங்கியாங் (Sangiang) தீவுக்கருகே காணாமற்போன 3 முக்குளிப்பாளர்களைத் தேடும் பணி நாளை மறு நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மூவரில் ஒருவர் சிங்கப்பூரர்; மற்ற இருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை முக்குளிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த மூவரையும் காணவில்லை.

இந்தோனேசியத் தேடல்-மீட்புக் குழுவினர் கடற்படைக் கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவியுடன் தேடிவருகின்றனர்.

இதுவரை 7,000 கடல் மைல் பரப்பளவில் தேடியும் 3 முக்குளிப்பாளர்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

தீவு அமைந்திருக்கும் சுண்டா நீரிணைப் பகுதியில் வலுவான கடலடி நீரோட்டம் ஏற்படுவது வழக்கம்.

இதற்கு முன்னரும் முக்குளிப்பாளர்கள் பலர் அதில் அடித்துச் செல்லப்பட்டனர்.  

Top