Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் வழிப்பறித் திருடர்களால் பாதிக்கப்படலாம் என்பது பொய்த்தகவல்: ஜொகூர்க் காவல்துறை

மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் வழிப்பறித் திருடர்களால் பாதிக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ஜொகூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் வழிப்பறித் திருடர்களால் பாதிக்கப்படலாம் என்பது பொய்த்தகவல்: ஜொகூர்க் காவல்துறை

படம்: AFP/Roslan Rahman

மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் வழிப்பறித் திருடர்களால் பாதிக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ஜொகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொகூர்க் காவல்துறைத் தலைவர் அய்யூப் கான் மைதீன் கூறினார்.

சமூக ஊடகங்களிப் பரப்பப்படும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம் என்றும் தகவல்களை உரிய தரப்புகளிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

ஜொகூர் மாநிலத்தில் வசிப்போர், அங்கு செல்வோர் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய குற்றச் செயல்களைத் துடைத்தொழிப்பதில் முனைப்புடன் செயல்படவிருப்பதாகத் திரு. அய்யூப் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்