Images
  • jb bridge
    ( படம்: AFP )

சிங்கப்பூர்-ஜொகூர் பாரு இடையே 3ஆம் பாலம் குறித்து முழுமையான ஆய்வு தேவை: மலேசிய உள்துறை அமைச்சர்

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையில் மூன்றாவது பாலம் கட்டப்படுவதன் அவசியம் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் கூறியுள்ளார்.

ஆய்வுக்குச் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் (1.64 மில்லியன் வெள்ளி) செலவாகும் என்றும் அது 9 மாதம் நீடிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ஆய்வுக்கான நிதி கிடைத்தால் அடுத்த ஆண்டின் முற்பாதியில் ஆய்வைத் தொடங்கி பாலம் குறித்து அக்டோபருக்குப் பின் முடிவெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் திரு. முஹைதீன் கூறினார்.

புதிய பாலத்துக்கான பரிந்துரையை மத்திய அரசாங்கம் அங்கீகரித்த பின்னரே அதுபற்றி சிங்கப்பூருடன் இருதரப்பு விவாதம் நடத்தப்படுமென்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான பாலங்களில் நெரிசலைக் குறைக்க மற்ற வழிகள் பற்றி ஆராயப்பட்டுவருவதாகவும் Malay Mail கூறியுள்ளது.

 

Top