Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜெரூசலத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் - சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை

ஜெரூசலத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் - சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை

வாசிப்புநேரம் -
ஜெரூசலத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் - சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை

படம்: AP Images

ஜெரூசலத்தில் அண்மை நாள்களில் நடந்துள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை தெரிவித்துள்ளது.

ஹராம் அல் ஷாரிஃப் (Haram al-Sharif) வழிபாட்டுத் தலத்திலும், ஷேக் ஜார்ரா (Sheikh Jarrah) குடியிருப்புப் பேட்டையிலும் வன்முறை வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.

மேலும் வன்முறையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என அது கேட்டுக்கொண்டது.

ஜெரூசலத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு ரமதான் மாதம் தொடங்கிய போது, இஸ்ரேல் பிரபல இடங்கள் சிலவற்றில் மக்கள் கூடத் தடை விதித்தது.

அதைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இருப்பினும் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அச்சுறுத்தி வெளியேற்றுவதாகக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் காயமடைந்தனர்.

அந்த இடத்துக்குப், பல ஆண்டுகளாக இருதரப்பும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்