Images
  • Chas Suspends King
    (படம்: AFP/Philippe Huguen)

முறையற்ற மானியக் கோரிக்கை செய்த Jesselton பல்மருத்துவ நிலையம் CHAS உதவித்திட்டத்திலிருந்து நீக்கம்

சுகாதார அமைச்சு Resilient சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் Jesselton பல்மருத்துவ நிலையத்தை CHAS எனப்படும் சமூக, சுகாதார உதவித்திட்டத்திலிருந்து நீக்கவுள்ளது.

வரும் சனிக்கிழமை 16 ஆம் தேதி அது நடப்புக்கு வரும்.

Jesselton பல்மருத்துவ நிலையத்தில் 2018ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையே, கணக்காய்வுச் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதில் CHAS மானியங்களுக்கான கோரிக்கைகள் முறையற்றதாகவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தொகை வரம்பை மீறி மானியங்களுக்கான கோரிக்கைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இந்நிலையில், Jesselton பல்மருத்துவ நிலையத்தின் உரிமம், Alliance நிர்வாகக் குழுவிடம் மாற்றப்பட்டுவிட்டதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் தெரிவிக்கப்பட்டது.

அதையும் கணக்கில் கொண்டு, Jesselton பல்மருத்துவ நிலையத்தை CHAS உதவித்திட்டத்திலிருந்து நீக்க அமைச்சு முடிவுசெய்தது.

உரிமையாளர் மாற்றப்பட்டாலும் தொடர்ந்து மருந்தகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. 

Top