Images
  • spf
    படம்: SPF

சிங்கப்பூரில் வேலை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 19 பேர் கைது

சிங்கப்பூரில் வேலை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையம்வழி வேலை இருப்பதாகவும் அந்த வேலைக்கு முன்தொகை செலுத்திவிட்டு அதன்பிறகு சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் சந்தேக நபர்கள் சிலரை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.

16 ஆடவர்களும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கடந்த 2 நாள்களாகக் காவல்துறை அதிகாரிகள் தீவு முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

அக்டோபர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை பொதுமக்களுக்குச் சந்தேக நபர்கள் குறுஞ்செய்தி, WhatsApp, Facebook, Instagram ஆகியவற்றின்மூலம் தொடர்புகொண்டதாகக் காவல்துறைக்குப் புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.

விசாரணை தொடர்கிறது.

- CNA/lk 

Top