Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூன் மாதத்தில் வேலை வாய்ப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்தது

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவு ஜூன் மாதம் 92,100க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவு ஜூன் மாதம் 92,100க்கு உயர்ந்துள்ளது.

அதாவது, வேலையில்லாத ஒவ்வொரு 100 பேருக்கும் 163 வேலை வாய்ப்புகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது

வேலை செய்யும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை பல துறைகளில் ஏற்றம் கண்டாலும், அதன் மீட்சி சீரற்றதாகப் பதிவானது என்று மனிதவள அமைச்சின் வேலை நிலவர அறிக்கை குறிப்பிட்டது.

தகவல் தொடர்பு, சுகாதாரத்துறை, சமூகச் சேவை உள்ளிட்ட வளர்ச்சித் துறைகளில் குடியிருப்பாளர்களுக்கு வேலை கிடைத்தது.

இருப்பினும், உயர்த்தப்பட்ட விழிப்புநிலையின் இரண்டாம் கட்டக் கட்டுப்பாடுகளால், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சில துறைகளில் வேலை செய்வோர் எண்ணிக்கை குறைந்தது.

உணவு-பானச் சேவைகள், சில்லறை வர்த்தகம், சுற்றுலா தொடர்பான கலைகள், பொழுதுபோக்கு ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டன.

கடுமையாக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், வேலை அனுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், குடியிருப்பாளர் அல்லாதோர் வேலை விதிகம், எல்லாத் துறைகளிலும் குறைந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்