Images
  • judokas olympics main pic
    (படம்: Instagram/sgolympics)

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: ஜூடோ பிரிவில் சிங்கப்பூரைப் பிரதிநித்த நால்வர்

ஒலிம்பிக் போட்டிகளில் ஜூடோ பிரிவில் (judo) சிங்கப்பூரைப் பிரதிநிதித்தவர்கள் நால்வர் மட்டுமே என்று நீங்கள் அறிவீர்களா?

1964 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிங்கப்பூர் தனது முதல் ஜூடோ பிரதிநிதிகளாக ஆங் டெக் பீயையும் (Ang Teck Bee) கணபதி சத்திய மூர்த்தியையும் (Kanapathy Sathia Moorthy) அனுப்பியது.

ஆங் டெக் பீயின் மகன்தான் புகழ்பெற்ற நீச்சல் வீர்ர ஆங் பெங் சியோங் (Ang Peng Siong). அவரும் ஒலிம்பிக்சில் பங்குபெற்றுள்ளார்.

அதற்குப் பிறகு, கோ எங் கியான் (Koh Eng Kian) 1976 மோன்ட்ரியல் (Montreal) ஒலிம்பிக்சில் ஜூடோவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார்.


(படம்: SNOC)


கடைசியாக ஹோ யென் சாய் (Ho Yen Chye) 1992 பார்சலோனா (Barcelona) ஒலிம்பிக் ஜூடோ பிரிவில் பங்கேற்றார்.


(படம்: Facebook/Singapore National Olympic Council)


நால்வரின் ஜூடோ ஒலிம்பிக் விவரம்:

  • ஆங் டெக் பீ: தோக்கியோ 1964-தகுதி பெறவில்லை

(ஆங் 2 வாரம் ஜப்பானின் கடுமையான வானிலையில் பயிற்சி செய்தபோது, அவரை அறியாமல் உடல் எடை குறைந்தது. அதனால் அவர், போட்டிக்குத் தகுதிபெறவில்லை.)

  • கணபதி சத்திய மூர்த்தி: தோக்கியோ 1964- முதல் சுற்று
  • கோ எங் கியான்: மோன்ட்ரியல் 1976- இரண்டாம் சுற்று
  • ஹோ யென் சாய்: பார்சலோனா 1992- முதல் சுற்று

தகவல்: Instagram/sg olympics, SNOC


meWATCH சேவையின் 14 சிறப்பு ஒளிவழிகளில் தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாகக் காணமுடியும். mewatch.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தில் பதிந்துகொள்ளவும். சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Top