Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜொகூர் இணைப்புப் பாலத்தில் பாதசாரிகளுக்குக் கூரைவேய்ந்த நடைபாதை

உட்லண்ட்ஸ்- ஜொகூருக்கு இடையிலான இணைப்புப் பாலத்தில் கூரைவேய்ந்த நடைபாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது ஜொகூர் அரசாங்கம். 

வாசிப்புநேரம் -

உட்லண்ட்ஸ்- ஜொகூருக்கு இடையிலான இணைப்புப் பாலத்தில் கூரைவேய்ந்த நடைபாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது ஜொகூர் அரசாங்கம்.

கூரைவேய்ந்த நடைபாதை வழியாக இணைப்புப் பாலத்தைக் கடக்கும் பாதசாரிகளுக்குப் பாதுகாப்பளிப்பது அதன் நோக்கம்.

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாதையின் நீளம் 1.2 கிலோமீட்டர்.
அதற்காகும் செலவு சுமார் 4.9 மில்லியன் வெள்ளி.

இணைப்புப் பாலத்தின் இருபக்கங்களிலும் தற்போதிருக்கும் மோட்டார்சைக்கிள் பாதை கூரைவேய்ந்த நடைபாதையாக மாற்றப்படும்.

புதிய பாதையினால் வாகனங்கள் செல்லும் அதே சாலையைப் பாதசாரிகளும் பயன்படுத்தவதற்குத் தேவை இருக்காது என்று ஜொகூரின் உள்கட்டமைப்புப் போக்குவரவுக் குழுவின் தலைவர் முகமது சொலிஹான் பத்ரி (Mohd Solihan Badri) கூறினார்.

சென்ற ஆண்டு இணைப்புப் பாலத்தைப் பயன்படுத்தியவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் பாதசாரிகள் என்று அவர் தெரிவித்தார்.

கூரைவேய்ந்த நடைபாதை குறித்த மேல்விவரங்கள் 3 வாரங்களுக்குள் மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்