Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மனிதவள அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஜோலோவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்

மனிதவள அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஜோலோவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்

வாசிப்புநேரம் -
மனிதவள அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ஜோலோவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்

படம்: REUTERS

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ , அவரது கணவர் இருவர் மீதும் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் திரு. ஜோலோவன் வெம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவருக்கும், டோனல்ட் லியூ என்பவருக்கும், திருமதி தியோவின் வழக்குரைஞர்கள் புதன்கிழமையன்று விளக்கம் கோரும் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

திரு. லியூ குற்றஞ்சாட்டியதற்கு நேற்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Surbana Jurong நிறுவனம், சமூகப் பராமரிப்பு வசதிகளை நிறுவியதில் திருமதி தியோவுக்கும் அவரது கணவருக்கும் ஆதாயம் இருந்ததாகத் திரு. வெம், இம்மாதம் 16-ஆம் தேதி தமது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திருமதி தியோவின் கணவர் Surbana Jurong நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை ஒப்புக்கொண்ட திரு. வெம் மன்னிப்புக் கோரினார்.

மேலும் அதற்கு Facebook பதிவின்மூலம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

தமது Facebook பக்கத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டதோடு, அது தொடர்பான எந்த ஓர் அறிக்கையையும் இனி வெளியிடப்போவதில்லை என்றும் திரு. வெம் உறுதியளித்தார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்