Images
  • Josephine Teo (3)
    (படம்: CNA)

மேம்பட்ட வர்த்தகச் செயல்முறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு உதவும் : மனிதவள அமைச்சர்

சேவைத் துறையில் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது, மேலும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வர்த்தகச் செயல்முறைகளுக்கு இட்டுச் செல்லும் என்றும், வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடு 2021ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என வரவுசெலவுத் திட்டத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவு அரசாங்கம் ஒரே நாளில் எடுத்த ஒன்றல்ல என்றார் அமைச்சர் தியோ.

அது சிரமமான முடிவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே 1.1 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள 200ஆம் ஆண்டு நிறைவு அனுசரிப்பு போனஸ் குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படுவதுபற்றி வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதனை நன்கொடையாகக் கருதக்கூடாது என்றார் அமைச்சர் தியோ.

938NOW வானொலி நிலையத்தின் Question Time நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

Top