Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேரிடர் விளைவுகளைச் சமாளிக்கும்போது மீள்திறன் அவசியம் - அமைச்சர் ஜோசஃபின் தியோ

பேரிடருக்குப் பிறகு ஏற்படும் விளைவுகளைக் கையாளும்போது மீள்திறன் அவசியம் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

பேரிடருக்குப் பிறகு ஏற்படும் விளைவுகளைக் கையாளும்போது மீள்திறன் அவசியம் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் நிர்வாகம் தொடர்பில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஐந்தாவது ஆசியான் உத்திபூர்வக் கொள்கைக் கருத்தரங்கில் அவர் அதனைத் தெரிவித்தார்.

இயற்கைப் பேரிடர் ஏற்படுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமையக்கூடும்.

குறிப்பாக ஆசியான் நாடுகள் அதன்மூலம் பாதிக்கப்படக்கூடும் என்றார் அவர்.

பேரிடர் ஏற்படும்போது அதனைக் கையாள, இருக்கும் வளங்களையும் உத்திகளையும் பயன்படுத்துவது குறித்துச் சமூகங்களும், சம்பந்தப்பட்ட துறையினரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்று திருமதி தியோ கூறினார்.

பேரிடரிலிருந்து மீண்டுவருவதே சமூகநலன் மேம்படுவதற்கு மிக முக்கியம் என்றார் அவர்.

"பேரிடரைக் கையாள்வதில் ஆசியானின் மீள்திறனை அதிகரித்தல்" என்பது இவ்வாண்டுக் கருத்தரங்கின் கருப்பொருள்.

தூதர்கள், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், ஆசியான் பிரதிநிதிகள் என சுமார் 160 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

வட்டார அளவிலான பேரிடர் நிர்வாகத்தையும் பதில் நடவடிக்கையையும் மேம்படுத்துவதற்கான எல்லைதாண்டிய கட்டமைப்புகளையும் ஆசியான் கொண்டுள்ளது.

பேரிடர் சமயங்களைக் கையாள்வதில் முதலில் செயலில் இறங்குவோருக்கான சிறந்த நடைமுறைகளை ஆராய சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை எதிர்வரும் நவம்பர் மாதம் ஒரு கருத்தரங்கை நடத்தவிருக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்