Images
  • amy khor
    (படம்: Mediacorp)

வழிபாட்டுக்காக எரிக்கப்படும் பொருள்கள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன - ஏமி கோர்

சிங்கப்பூரில் வழிபாட்டுக்காக எரிக்கப்படும் தாள்கள், ஊதுபத்தி குறித்த புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் இன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2015இல் வழிபாட்டுக்காக எரிக்கப்படும் தாள்கள், ஊதுபத்தி குறித்து சுமார் 1,100 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

அந்த எண்ணிக்கை 2018இல், சுமார் 500க்குக் குறைந்துள்ளதாக டாக்டர் கோர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போவின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

வழிபாட்டுக்காக எரிக்கப்படும் தாள்கள், ஊதுபத்தி ஆகியவற்றை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பொறுப்பான முறையில் எரிப்பதை ஊக்குவிக்க தேசியச் சுற்றுப்புற அமைப்பு நகர மன்றங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் கோர் கூறினார். 

Top