Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அக்டோபரில் நிறுவனங்களுக்குத் தவறுதலாகச் சுமார் 370 மில்லியன் வெள்ளி கொடுக்கப்பட்டது

வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், சென்ற ஆண்டு அக்டோபரில், கிட்டத்தட்ட 5,400 நிறுவனங்களுக்குத் தவறுதலாகச் சுமார் 370 மில்லியன் வெள்ளி கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், சென்ற ஆண்டு அக்டோபரில், கிட்டத்தட்ட 5,400 நிறுவனங்களுக்குத் தவறுதலாகச் சுமார் 370 மில்லியன் வெள்ளி கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வழங்குதொகையைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறுகளே அதற்குக் காரணம் என வர்த்தக-தொழில், நிதி, மனிதவள அமைச்சுகள் கூறின.

தவறுதலாகக் கொடுக்கப்பட்ட தொகை, சென்ற அக்டோபரில் கொடுக்கப்பட்ட மொத்த தொகையில் 6 விழுக்காடு என்று அவை குறிப்பிட்டன.

சென்ற ஆண்டு ஜூன் மாதம், அதிரடித் திட்டத்திற்குப் பின், நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட தேதிகளின் அடிப்படையில், வழங்கீடு கணக்கிடப்பட்டதாக அவை விவரித்தன.

ஆனால், நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிய தேதிகளைச் சேகரிப்பதிலும் பதிவு செய்வதிலும் தவறு ஏற்பட்டதாக அமைச்சுகள் தெரிவித்தன.

கூடுதல் தொகை பெற்ற நிறுவனங்கள் பின்னொரு தேதியில் திறக்கப்பட்டதாகத் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டது.

அதனால், அவை அதிகமான வழங்குதொகைக்குத் தகுதி பெற்றன.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை கட்டுமானம், கடல்துறை, பயணத்துறை ஆகியவற்றைச் சேர்ந்தவை.

நிறுவனங்கள் கூடுதல் தொகையைத் திருப்பிக் கொடுப்பது, அடுத்தடுத்த வேலை ஆதரவுத் திட்ட வழங்கீடுகளிலிருந்து தொகையைக் கழித்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் தொகையைத் திரும்பப் பெற அரசாங்கம் எண்ணியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்