Images
  • jurong bird park
    (படம்: Wildlife Reserves Singapore)

இலவச அனுமதியை வழங்கும் ஜூரோங் பறவைப் பூங்கா

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜூரோங் பறவைப் பூங்காவிற்குச் செல்ல ஆசையா? அதுவும் இலவசமாக?

அடுத்த மாதம், குறுகிய காலத்திற்கு மட்டும் நீங்கள் அவ்வாறு செய்யலாம்!

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை அனைத்து உள்ளூர் வாசிகளுக்கும் இலவச அனுமதியை வழங்குகிறது பூங்கா.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் ஆகியோர் அந்தச் சலுகையை அனுபவிக்கலாம்.

பூங்காவிற்குள் நுழைவது இலவசமாக இருந்தாலும் அதில் உள்ள 8 இடங்களில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கீழ்க்காணும் இடங்களில் நீங்கள் $2 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்

- Lory Loft
- Indoor Penguin Coast
- Wings of Asia
- Waterfall Aviary
- Parrot Paradise

கீழ்க்காணும் இந்த இடங்களுக்கு நீங்கள் $4 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்

- Birdz of Play
- High Flyers Show
- Kings of the Skies Show

Top