Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங்கிலுள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதியில் COVID-19 விதி மீறல்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை

ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதி ஒன்றில், COVID-19 சுகாதார விதி மீறல்கள் பற்றிய தகவல்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதி ஒன்றில், COVID-19 சுகாதார விதி மீறல்கள் பற்றிய தகவல்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஜாலான் துக்காங்கில் (Jalan Tukang) உள்ள வெளிநாட்டு ஊழியர் விடுதிக்குக் கலகத் தடுப்புக் காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களைச் சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக அமைச்சு கூறியது.

COVID-19 சுகாதார விதி மீறல்கள், போதுமான மருத்துவச் சேவை வழங்கப்படாத சம்பவங்கள், தரம் குறைந்த உணவு விநியோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் போன்றவை குறித்து கிடைத்த தகவல்கள் பற்றி அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

அத்தகைய குறைபாடுகள் நேர்ந்ததாக, சீனாவில் பயன்படுத்தப்படும் Weixin சமூக ஊடகத் தகவல் பரிமாற்றத் தளத்தில் தகவல் வெளிவந்ததாக அமைச்சு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்