Images
  • jurong east
    படம்: Google Maps

ஜூரோங் ஈஸ்ட்டில் பெண்ணும் சிறுமியும் மரணம்

ஜூரோங் ஈஸ்ட்டில் 29வயதுப் பெண்ணும் 5 வயதுச் சிறுமியும், மாண்டு கிடக்கக் காணப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தச் சம்பவம் புளோக் 288B, ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட்டில் நடந்தது.

புளோக்கின் கீழ்த்தளத்தில் அந்த இருவரும் நினைவிழந்த நிலையில் கிடக்கக் காணப்பட்டனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

அது குறித்து நேற்று முன்தினம்(பிப்ரவரி 6) காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

காவல்துறை அதனை இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.  

Top