மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது தாக்கப்பட்ட டான் வு மெங்
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங், நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது தாக்கப்பட்டதில் இலேசாகக் காயமடைந்தார்.
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங், நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது தாக்கப்பட்டதில் இலேசாகக் காயமடைந்தார்.
நேற்றிரவு சுமார் 10 மணியளவில் சந்திப்பு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்த ஓர் இளம் ஆடவர், தம்மைத் தாக்கத் தொடங்கியதாக டாக்டர் டான் மீடியாகார்ப்பிடம் தெரிவித்தார்.
அந்த இளையர் வரிசையில் காத்திருந்ததாகவும், பின்னர் திடீரென்று டாக்டர் டானை நெருங்கித் தாக்கியதாகவும் கூறப்பட்டது.
அப்போது டாக்டர் டான் வேறொரு குடியிருப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திலிருந்த தொண்டூழியர்களும், மற்ற குடியிருப்பாளர்களும் அந்த ஆடவரிடமிருந்து டாக்டர் டானைக் காப்பாற்றினர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையும், குடிமைத் தற்காப்புப் படையும் அங்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் ஆலோசனைக்கேற்ப மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட டாக்டர் டான், பின்னர் மீண்டும் மக்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்தார்.
தாக்கிய ஆடவர் வழக்கமாக மக்கள் சந்திப்புக்கு வருபவர் அல்ல.
சம்பவம் குறித்துக் காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.