Images
  • jurong island highway acc (1)
    (படம்: Video Screengrab)

ஜூரோங் ஐலண்ட் நெடுஞ்சாலை விபத்து: காயமுற்றவர்கள் வீடு திரும்பினர்

ஜூரோங் ஐலண்ட் நெடுஞ்சாலையில் (ஜனவரி 9) புதன்கிழமை நடந்த விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தோரில் 21 பேர் வீடு திரும்பி விட்டனர்.

இன்னும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்தின்போது லாரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை, அதைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

காயமடைந்த ஊழியர்கள் விபத்து அதிர்ச்சியில் இருந்து மீளவும், அவர்களது சிகிச்சைக்கு உதவி வருவதாகவும் ஊழியர்களின் நிறுவன பேச்சாளர் குறிப்பிட்டார்.

விபத்தில் காயமடைந்த 23 பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையிலும், இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

Top