Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் ஏரி வட்டாரத்தில் புதிய ஒருங்கிணைந்த பயணத்துறை மையம் : அமைச்சர் சீ

ஜூரோங் ஏரி வட்டாரத்தில் 2026ஆம் ஆண்டுக்குள் புதிய, ஒருங்கிணைந்த பயணத்துறை மையம் உருவாக்கப்படவிருக்கிறது.  

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜூரோங் ஏரி வட்டாரத்தில் 2026ஆம் ஆண்டுக்குள் புதிய, ஒருங்கிணைந்த பயணத்துறை மையம் உருவாக்கப்படவிருக்கிறது.

வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் அதனை அறிவித்தார்.

பயணத்துறைத் தலங்களை சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவும் அரசாங்கத்தின் உத்திக்கு ஏற்ப அவ்வாறு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சைனீஸ் கார்டன் பெருவிரைவு ரயில் நிலையத்தின் ஓரமாக உருவாகும் புதிய மையத்தில் பயணக் கவர்ச்சி இடங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே, சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், இரவு சஃபாரி, ஆற்று சஃபாரி ஆகிய இடங்களுக்குப் புத்துயிர் அளிக்க மின்னிலக்கத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

விலங்குகளைப் புதிய கோணங்களில் பார்க்க அந்தத் தொழில்நுட்பம் உதவும்.

அந்த இயற்கைச் சுற்றுலாத் தலங்களுக்கெனப் பெருந்திட்டம் வரையப்பட்டுள்ளது.

புதிய பறவைப் பூங்கா, மழைக்காட்டுப் பூங்கா ஆகியவை அடங்கிய மண்டாய் சூழலியல் பயணத்துறை நடுவத்துக்குத் துணையாக அந்தப் பெருந்திட்டம் அமையும்.

அந்த நடுவம் அடுத்த நான்காண்டுகளில் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்