Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வட்டார ரயில்பாதை: 5 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

ஜூரோங் வட்டார ரயில்பாதையில் 5 ரயில் நிலையங்களைக் கட்டுவதற்கான 2 குத்தகைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜூரோங் வட்டார ரயில்பாதை: 5 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

(படம்: Land Transport Authority)

ஜூரோங் வட்டார ரயில்பாதையில் 5 ரயில் நிலையங்களைக் கட்டுவதற்கான 2 குத்தகைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது.

அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 740 மில்லியன் வெள்ளி.

ரயில் நிலையம் கட்டும் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவா சு காங், சுவா சு காங் வெஸ்ட் , தெங்கா ரயில் நிலையங்களையும், அவற்றுக்கிடையிலான 4 புள்ளி 3 கிலோமீட்டர் இணைப்புப் பாலத்தையும் Shanghai Tunnel Engineering நிறுவனம் கட்டவிருக்கிறது.

அதன் தொடர்பில் சுமார் 465 மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க குத்தகை அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

ஹோங் கா மற்றும் கார்பரேஷன் ரயில் நிலையங்கள், அவற்றை இணைக்கும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு Eng Lee Engineering நிறுவனம் பொறுப்பேற்கிறது. அதற்கான சுமார் 274 மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க குத்தகையை அந்நிறுவனம் பெற்றுக்கொண்டது.

கிட்டத்தட்ட 24 கிலோமீட்டர் தொலைவுகொண்ட ஜூரோங் வட்டார ரயில்பாதை, சிங்கப்பூரின் 7ஆவது பெருவிரைவுப் பாதையாக அமையும்.

அதில் அமையவிருக்கும் 24 ரயில் நிலையங்கள் 2026ஆம் ஆண்டிலிருந்து 3 கட்டங்களில் திறக்கப்படும்.

தொடக்கத்தில் மேற்குப் பகுதியில் வசிக்கும் 200ஆயிரம் பேர் அந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பின்னர் அது படிப்படியாக அரை மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டக்கூடும் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்