Images
  • jurong west
    (படம்: Google Street Maps)

ஜூரோங் வெஸ்ட் வீட்டில் மூண்ட தீயில் ஆடவர் மரணம்

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மூண்ட தீயில் 51 வயது ஆடவர் மாண்டார்.

சம்பவம் நேற்று (நவம்பர் 8) காலை, புளோக் 516 ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 52-இல் நடந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.

அந்த வீட்டில் ஆடவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரியவந்தது.

பின்னர், அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல் துறை வகைப்படுத்தியுள்ளது.

விசாரணை தொடர்கிறது. 

Top