Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேலும் 86 சமாதான நடுவர்கள் நியமனம்

அதிபர் ஹலிமா யாக்கோப், மேலும் 86 சமாதான நடுவர்களை நியமித்துள்ளார். அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரின் சமாதான நடுவர்களின் மொத்த எண்ணிக்கை 185.

வாசிப்புநேரம் -
மேலும் 86 சமாதான நடுவர்கள் நியமனம்

(படம்: Ministry of Home Affairs)

அதிபர் ஹலிமா யாக்கோப், மேலும் 86 சமாதான நடுவர்களை நியமித்துள்ளார். அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரின் சமாதான நடுவர்களின் மொத்த எண்ணிக்கை 185.

அவர்களில் திரு திருநாலுக்கரசு, திரு இரா.தினகரன் ஆகியோர் அடங்குவர்.

(படம்: நசிர் கனி)

அதிபரால் இன்று நியமிக்கப்பட்டோரில் 44 பேர் முதல் தவணை காலத்திற்கு நியமனம் பெற்றவர்கள்.

மற்ற 42 பேர் 2ஆவது அல்லது 3ஆவது தவணைக் காலத்துக்கு நியமனம் பெற்றவர்கள்.

சமாதான நடுவர் விவாகரத்து வழக்குகளில் முக்கியப் பங்காற்றுவர்.

அரசு நீதிமன்றங்களிலும் சமரசப் பேச்சுகளில் தொண்டூழியர்களாகவும் அவர்கள் பணிபுரிவர்.

சிங்கப்பூரின் சிறைச்சாலைகளுக்கு வருகை தரும் நீதிபதிகளாகவும் அவர்கள் செயல்படுவதுண்டு.

இன்றிலிருந்து 5 ஆண்டு காலம் சமாதான நடுவர்களாக அவர்கள் பணியாற்றுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்