Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் ஆலோசகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார் திரு. J Y பிள்ளை: புதிய தலைவர் திரு. எடி தியோ

அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவராக ஆக நீண்டகாலம் பொறுப்பு வகித்து வந்துள்ள திரு. J Y பிள்ளை அடுத்த மாதம் ஓய்வுபெறுகிறார்.

வாசிப்புநேரம் -

அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவராக ஆக நீண்டகாலம் பொறுப்பு வகித்து வந்துள்ள திரு. J Y பிள்ளை அடுத்த மாதம் ஓய்வுபெறுகிறார்.

அவருக்குப் பதிலாக தற்போதைய மன்ற உறுப்பினர் திரு. எடி தியோ அந்தப் பொறுப்பை ஏற்பார்.

திரு. பிள்ளை ஜனவரி இரண்டாம் தேதி ஓய்வுபெறுவார் என்றும் அதே நாளில் திரு. தியோ பதவியேற்பார் என்றும் அதிபர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

புதிய தலைவரின் பதவிக்காலம் 2020 ஜூன் முதல் தேதி முடிவுக்கு வரும்.

திரு. பிள்ளை 2001 ஜனவரி இரண்டாம் தேதியிலிருந்து 18 ஆண்டாக மன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

அதில் 14 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

ஜனவரி முதல் தேதி அவரது நியமனம் முடிவுக்கு வரும்.

தேசிய நிதியிருப்பைப் பாதுகாப்பது, அரசாங்கச் சேவையின் நேர்மையைக் கட்டிக்காப்பது ஆகியவற்றில் சிங்கப்பூரின் 6ஆம், 7ஆம், 8ஆம் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் மன்றத்தைத் திரு. பிள்ளை வழிநடத்தினார்.

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அவர் தொடர்ந்து ஆலோசகராகவோ நிர்வாகக் குழு உறுப்பினராகவோ செயல்படுவார் என்று கூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்