Images

படங்கள் கூறும் கதைகள்...(காணொளி)

பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடியது நினைவிருக்கிறதா?

கண்ணாமூச்சி விளையாடியது?

வகுப்பில் வாயடித்து ஆசிரியரிடம் திட்டு வாங்கியது மறந்திருக்காதே?

முதன்முதலில் சேலை கட்டிய ஞாபகம்?

முதல் காதல்?

வாழ்க்கை ஓட்டத்தில் நம் மனதுக்கு நெருக்கமான பல நிகழ்வுகள் நினைவோடு ஒன்றிப்போயிருந்தது ஒருகாலம்.

நாட்கள் செல்லச் செல்ல நம் மனதின் ஆழத்தில் அவை புதைந்து கொள்கின்றன.

என்றாவது ஒருநாள் பழைய புகைப்படங்களைப் புரட்டிப் பார்க்கும்போதுதான் தெரியும். அந்தப் பழைய ஞாபகங்கள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவை என்று.

அப்படி ஒரு தருணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார் திருமதி. தனக்கொடி.  

Top