Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்க் கதைகளை உயிரோவியங்களாக மாற்றி சிறாரை ஈர்க்கும் 'கதை நேரம்' நிகழ்ச்சி

தமிழ்க் கதைப் புத்தகங்களை உயிரோவியங்களின் வழி மின்னிலக்கமயமாக்குகிறது "கதை நேரம்" எனும் நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

தமிழ்க் கதைப் புத்தகங்களை உயிரோவியங்களின் வழி மின்னிலக்கமயமாக்குகிறது "கதை நேரம்" எனும் நிகழ்ச்சி.

தமிழ்மொழி விழாவை ஒட்டி, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது Creative Hands அமைப்பு.

இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிறும் காலை 10 மணிக்குப் புதிய கதை வெளியிடப்படுகிறது.

தொடக்கப்பள்ளி கீழ்நிலை மாணவர்களுக்கென ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சி பற்றி மேல் விவரம் தருகிறார், கதை நேரத்தின் உயிரோவிய இயக்குநர் திரு. ஜெகன்நாத் ராமானுஜம்.

குழந்தைகளுக்குத் தமிழ்மொழிக் கதைகளை உயிர் ஓவியங்கள் மூலமாக கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கிய ஒரு தளம்தான் "கதை நேரம்".

இதில் நாம் வெளியிடும் அனைத்துக் கதைகளும் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதைகள்.

நாங்கள் வெளியிடும் கதைகளில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு
கதையிலும் அந்தக் கதைக்கான முடிவை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.

நாங்கள் அந்த இருவழித் தொடர்பு அம்சம் சேர்த்துக்கொண்டதற்கான காரணம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு, அந்த முடிவிற்கான பின்விளைவுகள் இந்த இரண்டையும் அவர்கள் பார்க்க முடியும்.

கதை நேரத்தின் மூன்றாவது கதை, இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதைக் காண விரும்புவோர், www.kathaineram.com எனும் இணையப்பக்கத்தை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்