Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எல்லை விவகாரம் - மலேசியாவின் நடவடிக்கைகள் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஆக்கபூர்வமான முன்னேற்றப்படி: அமைச்சர் காவ்

போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான், பதற்றத்தைக் குறைப்பதற்கு மலேசியா தெரிவித்துள்ள கடப்பாடும் அதற்கென அண்மையில் அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமான முன்னேற்றப்படி என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
எல்லை விவகாரம் - மலேசியாவின் நடவடிக்கைகள் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஆக்கபூர்வமான முன்னேற்றப்படி: அமைச்சர் காவ்

(படம்: TODAY கோப்புப் படம்)

போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான், பதற்றத்தைக் குறைப்பதற்கு மலேசியா தெரிவித்துள்ள கடப்பாடும் அதற்கென அண்மையில் அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமான முன்னேற்றப்படி என்று கூறியிருக்கிறார்.

அதே போன்று சிங்கப்பூரும் தற்போதைய சர்ச்சைக்கு அமைதித் தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய திரு. காவ், சிங்கப்பூர்க் கடற்பகுதியில் எஞ்சியுள்ள தனது கப்பலை மலேசியா மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விபத்து நேரும் சாத்தியத்தைத் தவிர்க்க அது அவசியம் என்றார் அவர்.

அத்தகைய அபாயம் நிலவுவது அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருதரப்புப் பேச்சுக்கு உகந்ததல்ல என்றும் திரு. காவ் குறிப்பிட்டார்.

சில ஆயிரம் டன் எடை கொண்ட பெரிய கப்பல்கள் அதிக வேகத்தில் செல்லும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.

சிலேத்தார் விமான நிலையத்தின் ILS எனும் விமானத்தைத் தரையிறக்கும் முறைக்கு எதிராக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் (Anthony Loke) தம் Facebook பக்கத்தில் பதிவேற்றியிருந்த காணொளியில் சில தவறுகள் இருப்பதாக அமைச்சர் காவ் தெரிவித்தார்.

அந்த ஏற்பாடுகள் நன்கு செயல்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் பயனளித்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்