Images
  • muis
    (படம்: MUIS)

கேரள மாநில வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் 84 ஆயிரம் வெள்ளி நிதியுதவி

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிங்கப்பூர்  முஸ்லிம் சமூகம் சுமார் 84 ஆயிரம் வெள்ளியைத் திரட்டியுள்ளது.

அத்துடன் சுலாவெசி நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 362 ஆயிரம் வெள்ளியை அது திரட்டியுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை ரஹ்மத்தான் லில் அலாமின் அறக்கட்டளையும் சிங்கப்பூரின் அனைத்துப் பள்ளிவாசல்களும் இணைந்து இரு பேரிடர்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டின.

திரட்டப்பட்ட நிதி, காசோலையாக இன்று ( நவம்பர் 27) Mercy Relief சிங்கப்பூர் அறநிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

சுலாவெசியில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிக இருப்பிடங்கள் அமைக்கவும், தற்காலிகக் கல்வி நிலையங்கள் அமைக்கவும் நிவாரண நிதி உதவும்.

பேரிடர்களின் போது சமூகம் கொடுக்கும் ஆதரவு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றார் ரஹ்மத்தான் லில் அலாமின் அறக்கட்டளையின் தலைவர்.

வெளிநாடுகளில் உள்ள வசதி குறைந்தோருக்கு உதவ சிங்கப்பூரர்கள் முன்வருவதை இது காட்டுவதாகக் கூறினார் Mercy Relief சிங்கப்பூர் அறநிறுவனத்தின் தலைவர்.

2004ஆம் ஆண்டிலிருந்து ரஹ்மத்தான் லில் அலாமின் அறக்கட்டளை சுமார் 7 மில்லியன் வெள்ளியை நன்கொடையாகத் திரட்டியுள்ளது.

Top