Images
  • KFC Straws (1)
    (படம்: Facebook)

KFC உணவகத்தில் உறிஞ்சு குழல் வழங்கப்படவில்லை!

KFC உணவகத்தில் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படவில்லை என அந்த உணவகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்களுக்கு உறிஞ்சு குழல்கள் வழங்குவதை நிறுத்திய KFC உணவகம் இப்போது மீண்டும் அவற்றை வழங்குவதாக சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து அந்த உணவகம் அதனை மறுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை, KFC உணவகத்தின் கிளை ஒன்றில் காகிதக் குவளைகளும் உறிஞ்சு குழல்களும் தென்படும் புகைப்படம் Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

அது குறித்து சேனல் நியூஸ்ஏஷியாவிடம் பேசிய KFC உணவகம், தனது கிளைகளிடம் உறிஞ்சு குழல்களை வழங்கக்கூடாது எனும் கொள்கையைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தது.  

Top