Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒளிரும் படங்களால் கடும் சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்கான புதிய வழி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஒளிரும் படங்களைக் கொண்டு கடுமையான சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்காணும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஒளிரும் படங்களால் கடும் சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்கான புதிய வழி

(படம்: Nanyang Technological University, Singapore)

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஒளிரும் படங்களைக் கொண்டு கடுமையான சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்காணும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பல்கலைக்கழகம் அதன் அறிக்கையில் அந்தத் தகவலை வெளியிட்டது.

எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு கோளாற்றைக் கண்டறிய முடியும் எனத் தெரியவந்தது.

உடலுக்குள் எதையும் செலுத்திச் சோதிக்கவேண்டிய தேவையிருக்காது.

அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர்க் காப்புரிமைக்குப் பதிந்துகொள்ளப்பட்டுள்ளது.

அடுத்து, கடுமையாக உடல்நலிவுற்ற நோயாளிகளிடம் அதனைச் சோதித்துப் பார்ககமுடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கடுமையான சிறுநீரகக் கோளாறு என்பது சிறுநீரகங்களின் இயக்கம் திடீரென நின்றுவிடும்போது ஏற்படுகிறது. அதை முன்கூட்டியே கண்டறியத் தற்போது எந்தவிதப் பரிசோதனை நடைமுறையும் இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்