Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு இரு தலைவர்களின் கைகுலுக்கலோடு தொடக்கம்

முதன்முறையாக இருவரும் சந்திப்பதையொட்டி பேசிய திரு டிரம்ப், வடகொரியாவுடன் சிறப்பான உறவு இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு தொடங்கிவிட்டது.
செந்தோசாவின் கப்பேலா ஹோட்டலுக்கு இருவரும் இன்று காலை 9 மணிக்கு முன்னரே சென்று சேர்ந்தனர்.

பின்னர் 9 மணியளவில் இருவரும் கைகுலுக்கி சந்திப்பைத் தொடங்கினர்.

(படம்: AFP/Saul Loeb)

இன்றைய சந்திப்பு எளிதில் இடம்பெறவில்லை என்றும் இருப்பினும் சவால்களைக் கடந்து இன்று தாங்கள் இருவரும் பேசுவதைச் சுட்டினார் திரு கிம்.

வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடுவதற்குப் பரிமாற்றமாக அமெரிக்கா சிறப்புப் பாதுகாப்பு உத்தரவாதங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(படம்: REUTERS)

இருவரும் பேசிய பிறகு பணிசார்ந்த மதிய விருந்தில் திரு கிம்மும் திரு டிரம்பும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்