Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிம்-டிரம்ப் உச்சநிலைச் சந்திப்பின்போது மலர்ந்த நட்பு - வடகொரியாவிற்குச் செல்ல அரிய அழைப்பு

சிங்கப்பூர்க் காவல் படையில் பணிபுரியும் 25 வயது தேசிய சேவையாளருக்குக் கிடைத்தது அரிய அழைப்பு.

வாசிப்புநேரம் -
கிம்-டிரம்ப் உச்சநிலைச் சந்திப்பின்போது மலர்ந்த நட்பு - வடகொரியாவிற்குச் செல்ல அரிய அழைப்பு

(படம்: Fann Sim)

சிங்கப்பூர்க் காவல் படையில் பணிபுரியும் 25 வயது தேசிய சேவையாளருக்குக் கிடைத்தது அரிய அழைப்பு.

சிங்கப்பூரிலிருந்து வடகொரியாவிற்குச் சென்று அங்குள்ள சிறப்பு உணவுகளை உண்ண ஓர் அழைப்பு.

தென் கொரியாவில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்து வரும் கிம் ஜூ ஹியுங் தேசிய சேவைக்காகக் கடலோர காவல் படையில் சேர்ந்தார்.

கிம்-டிரம்ப் உச்சநிலைச் சந்திப்பின்போது போர்காலப் படைவீரரான அவர் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

இதற்கு முன்னர் அந்தப் பணியை ஏற்றதில்லை என்பதால் அவர் தம் திறனில் சந்தேகம் கொண்டார். எனினும் பெற்றோரின் ஆதரவோடு பணியில் இறங்கினார்.

வடகொரியர்கள் பேசும் கொரியமொழி வேறு என்பதால் திரு கிம், தொடக்கத்தில் வடகொரிய அதிகாரிகளுடன் பேச அஞ்சினார்.

ஆனால், சந்திப்பு போகப்போக வடகொரிய அதிகாரிகள், திரு கிம் ஆகியோருக்கு இடையே இருந்த நட்பு வலுவானது.

கொரிய மொழியில் சரளமாக உரையாடிப் பழகிய திரு கிம்மை வடகொரியத் தலைநகரமான பியோங்யாங்கிற்கு வருகையளிக்கும்படி வடகொரிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்