Images
  • kkh expired medicine
    (படம்: Facebook/Judy Teo)

காலாவதியான மருந்தைக் கொடுத்ததற்காக மன்னிப்புக் கேட்ட KK மருத்துவமனை

குழந்தைக்குக் காலாவதியான சொட்டு மருந்தைக் கொடுத்ததற்காக கே. கே. மகளிர், சிறார் மருத்துவமனை மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

செயல்முறையை மேம்படுத்த தனிப்பட்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.

தமது கைக்குழந்தைக்கு மருத்துவமனை கொடுத்த மருந்து, காலாவதியாகி 4 மாதங்களாகிவிட்டதாகத் தாயார் ஒருவர் Facebook பதிவில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் மன்னிப்பு வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஊழியர்களுடன் பேசி, விதிமுறைகளை வலியுறுத்தியிருப்பதாக மருத்துவமனை கூறியது.

குழந்தையின் பெற்றோருடன் தொடர்ந்து கலந்துபேசி வருவதாகவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளித்துவருவதாகவும் அது கூறியது. 

Top