Images
  • kl
    (படம்:AFP)

மலேசியா: அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை அனுசரிக்கும் பேரணி தள்ளிவைப்பு

மலேசியாவில் அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளால் அங்கு பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிக்கக்கூடும் என்று ஆணையத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் மலேசியக் காவல்துறை தகவல் அனுப்பியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்துலக மனித உரிமைகள் தினப் பேரணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

Top