Images
  • crime (2)
    (படம்: AFP)

கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஆடவர் கைது

உட்லண்ட்ஸ் பகுதியில் ஆடவர் ஒருவரைக் கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் 41 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (ஜனவரி 11) இரவு 10 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் பெற்றது சிங்கப்பூர்க் காவல்துறை.

உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 13 பகுதியில் ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

காவல்துறையின் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டுமென்றே தீங்கு விளைவித்ததாக அவர்மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் ஆடவருக்கு அதிபட்சமாக 7 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



Top