Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"Kolam" சடங்கு முறையை இதுவரை பார்த்ததில்லை: தீயணைப்பு நிலையத்தின் தளபதி

முழுநேர தேசியச் சேவையாளர் கொக் யுவென் சின் (Kok Yuen Chin), கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்டு மாண்ட வழக்கில், துவாஸ் வியூ (Tuas View) தீயணைப்பு நிலையத்தின் தளபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -


முழுநேர தேசியச் சேவையாளர் கொக் யுவென் சின் (Kok Yuen Chin), கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்டு மாண்ட வழக்கில், துவாஸ் வியூ (Tuas View) தீயணைப்பு நிலையத்தின் தளபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

"Kolam" எனும் சடங்கு முறையை, இதற்கு முன்னர் தாம் பார்த்ததோ அதில் பங்கேற்றதோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

லெஃப்டனண்ட் கெனத் சொங் (Lieutenant Kenneth Chong), மூத்த வாரண்ட் அதிகாரி நஸான் முகமது நஸி, ஆகிய இருவருக்கு எதிராக மேஜர் ஹுவாங் வெய்காங் (Major Huang Weikang) அவ்வாறு கூறினார்.

"Kolam" சடங்கு என்றால் என்னவென்று தமக்குத் தெரியும் என்றபோதும், ஒருபோதும் அதைத் தாம் கண்டதில்லை என்றார் அவர்.

"Kolam" சடங்கு என்றால் ஒருவரை நீரேற்றுக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது என்று அவர் விளக்கமளித்தார். 22 வயது கார்ப்பரல் கொக்கைத் துன்புறுத்தி அவருக்கு மரணம் விளைவித்ததாக அந்த இரு அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரல் கொக்கை கிணற்றுக்குள் தள்ளிவிட்ட சக அதிகாரிகளை அந்த இருவரும் தடுத்து நிறுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நேர்ந்த 36 நிமிடங்களுக்கு பிறகு கார்ப்பரல் கொக்கின் உடல் அந்தக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியன்று அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் நடந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று தாம் பணியில் இல்லை என்றும் தளபதி மேஜர் ஹுவாங் வெய்காங் நீதிமன்றத்தில் கூறினார். விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்