Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வடகொரிய அதிகாரிகள் வந்து சென்றபோது தடை உத்தரவுகள் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்தோம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூர்த் துறைமுகத்திற்கு வடகொரிய அதிகாரிகள் வந்து சென்றபோது, எந்தத் தடை உத்தரவுகளும் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வடகொரிய அதிகாரிகள் வந்து சென்றபோது தடை உத்தரவுகள் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்தோம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

(படம்: Jeremy Long/ CNA)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூர்த் துறைமுகத்திற்கு வடகொரிய அதிகாரிகள் வந்து சென்றபோது, எந்தத் தடை உத்தரவுகளும் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

அந்தச் சந்திப்பின்போது, வட கொரியாவின் நம்போ (Nampo) துறைமுகம் சார்ந்த சில தடை உத்தரவுகள் மீறப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு அமைப்பின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.

நம்போ துறைமுகம், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்பட்டிருப்பதை, அறிக்கை சுட்டியது.

அதற்கு பதிலளித்த சிங்கப்பூர், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், வட கொரியாவின் நிலம் மற்றும் கடல் போக்குவரத்து அமைச்சர் தலைமையிலான பேராளர் குழு சிங்கப்பூருக்கு வந்ததை உறுதிப்படுத்தியது.

அந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள், ஐக்கிய நாட்டு அமைப்பால் குறிப்பிடப்பட்ட தனி நபர்கள் அல்ல என்று சிங்கப்பூர் தெளிவுபடுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்