Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜப்பானைத் தாக்கியுள்ள கிரோசா சூறாவளி

ஜப்பானின் தென்-மேற்குப் பகுதியில் கடுமையான கிரோசா (Krosa) சூறாவளி வீசியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
ஜப்பானைத் தாக்கியுள்ள கிரோசா சூறாவளி

(படம்: Suo Takekuma/Kyodo News via AP) 76

ஜப்பானின் தென்-மேற்குப் பகுதியில் கடுமையான கிரோசா (Krosa) சூறாவளி வீசியிருக்கிறது.

அங்குக் கடுங்காற்றுடன் கனத்த மழையும் பெய்கிறது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி நகர்ந்துகொண்டிருக்கிறது.

நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் சிறப்பு விழாக்காலத்தை முன்னிட்டு, பலரும் விடுமுறைப் பயணங்கள் மேற்கொண்டு வீடு திரும்புகின்றனர்.
கிரோசா சூறாவளியால் பயண ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

சூறாவளி கடந்துசெல்லும் பாதையில் இருக்கும் சுமார் 550,000 பேர் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை குறைந்தது 4 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

600க்கும் அதிகமான உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பல அதிவிரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்