Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உரிமம் இல்லாமல் செயல்பட்ட KTV நிலையத்தில் COVID-19 விதி மீறல்? - 44 பேரிடம் விசாரணை

உரிமம் இல்லாமல் செயல்பட்ட KTV நிலையத்தில் COVID-19 விதி மீறல்? - 44 பேரிடம் விசாரணை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட KTV நிலையத்தில் COVID-19 பாதுகாப்பு விதிகளை மீறிய சந்தேக நபர்கள் 44 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் தேதி பூன் லே வே-யில் உள்ள Tradehub 21 கட்டடத்தில் உரிமம் இல்லாத KTV நிலையம் செயல்படுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் அங்கு சென்றபோது, 17 இலிருந்து 34 வயதுடைய சிலர் மது அருந்திவிட்டு, விதிகளை மீறி நடந்து கொண்டிருப்பதாகத் தெரியவந்தது.

நாளை 35 பேர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரை சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரை அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் 9 பேரிடம் விசாரணை தொடர்கிறது.

- CNA/jt 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்