Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Kusu தீவுக்கு வழிபாட்டுக்குச் செல்வோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்

 Kusu தீவுக்கு வழிபாட்டுக்குச் செல்வோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்

வாசிப்புநேரம் -
Kusu தீவுக்கு வழிபாட்டுக்குச் செல்வோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்

(கோப்புப் படம்: Gwyneth Teo)

சமய வழிபாடுகளுக்காக கூசுத் (Kusu) தீவிற்குச் செல்ல விரும்புவோர், COVID-19 பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுக் காலத்தின்போது, சீன, மலாய் மக்கள் பலர் கூசுத் (Kusu) தீவுக்குச் செல்வது வழக்கம்.

சிறப்பு வழிபாட்டிற்கான காலம் இம்முறை அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 6-ஆம் தேதி நிறைவுபெறும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நாளொன்றுக்கு 500 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.

அத்துடன், ஒரு மணிநேரத்திற்கு ஒரு பயணப்படகு மட்டுமே தீவிற்குச் சேவை வழங்கும்.

அதில் அதிகபட்சம் 50 பேர் வரை மட்டுமே பயணம் செய்யலாம்.

பயணச் சீட்டுகள் இம்மாதம் 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

தீவிற்குள் நுழைவோர் SafeEntry முறையில் பதிவுசெய்யவேண்டும்.

தீவில் உள்ள பிரபல சீனக் கோயிலுக்குள் ஒரு நேரத்தில் 30 பேர் மட்டுமே செல்லலாம்.

-CNA/ga(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்