Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 15 ஆண்டில் முதன்முறையாகக் குறைந்துள்ள தாதியர் எண்ணிக்கை

சிங்கப்பூரில், சென்ற ஆண்டு, தாதியர் எண்ணிக்கை குறைந்திருப்பது சிங்கப்பூர்த் தாதியர்க் கழகத்தின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், சென்ற ஆண்டு, தாதியர் எண்ணிக்கை குறைந்திருப்பது சிங்கப்பூர்த் தாதியர்க் கழகத்தின் ஆண்டறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தாதியர் எண்ணிக்கை, அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 572 குறைவு.

  • 2019ஆம் ஆண்டில் : 42,668 தாதியர்
  • 2020ஆம் ஆண்டில் : 42,096 தாதியர்

தாதியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர்ச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புடன் பதிவுசெய்துகொண்ட தாதியரை மருத்துவமனைகளில் பணியமர்த்த முயற்சி செய்கிறது.

தாதியராகப் பதிவுசெய்துகொண்ட சிலர், தாதியர் பணியில் தற்போது இல்லை. அவர்களிடமிருந்தும் அமைச்சு உதவி நாட முற்படுகிறது.

இதுவரை, சுமார் 900 பேர், தாதியர் வேலையில் ஈடுபட முன்வந்துள்ளனர். அவர்கள் பொருத்தமான பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என அமைச்சு குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்