Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'COVID-19 கிருமியின் பாதிப்பைக் கையாள மலேசியாவும், சிங்கப்பூரும் தகவல் பரிமாறிக்கொள்வது முக்கியம்'

COVID-19 கிருமியின் பாதிப்பைக் கையாள்வதற்கு மலேசியாவும், சிங்கப்பூரும் தகவல் பரிமாறிக்கொள்வது முக்கியம் என்று சிங்கப்பூரின் சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் (Lam Pin Min) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'COVID-19 கிருமியின் பாதிப்பைக் கையாள மலேசியாவும், சிங்கப்பூரும் தகவல் பரிமாறிக்கொள்வது முக்கியம்'

படம்: REUTERS

COVID-19 கிருமியின் பாதிப்பைக் கையாள்வதற்கு மலேசியாவும், சிங்கப்பூரும் தகவல் பரிமாறிக்கொள்வது முக்கியம் என்று சிங்கப்பூரின் சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் (Lam Pin Min) கூறியிருக்கிறார்.

கிருமிப் பரவலைக் கையாளும் மலேசிய-சிங்கப்பூர்க் கூட்டுப் பணிக்குழுவிற்கு, மலேசிய அமைச்சருடன் அவர் இணைந்து தலைமைதாங்குகிறார்.

யாரேனும் பாதிக்கப்பட்டால் அவருடன் தொடர்புகொண்டோரை அடையாளங்காணத் தகவல் பரிமாற்றம் உதவும் என்றார் டாக்டர் லாம்.

எல்லைப் பகுதியில் உடல் வெப்பநிலைப் பரிசோதனை நடத்துதல், தேவைப்பட்டால் நாடுகளுக்கு இடையில் நோயாளிகளை மாற்றிவிடுதல் ஆகியவற்றின் தொடர்பில் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றலாம்.

அதன் மூலம் COVID-19 கிருமியை எதிர்த்துப் போராடலாம் என்றார் டாக்டர் லாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்