Images
  • lambo

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ரேஸ்" கார்கள்

ஞாயிறு மாலையில் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள கடைகளில், பொருட்களை வாங்கிய பிறகு மக்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

விடுமுறை என்பதால், வெளிநாட்டு ஊழியர்களும் அருகில் உள்ள திறந்த வெளியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இது வழக்கமான காட்சி தான். ஆனால் ஒரு வித்தியாசம்!!!


சாலையில் இன்று (16 செப்டம்பர்) சுமார் 10 Lamborghini சொகுசுக் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மஞ்சள், சிவப்பு, பச்சை எனக் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்தது.


சிலர் கார்களுக்கு அருகே நின்று படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அத்தனை சொகுசுக் கார்கள் லிட்டில் இந்தியாவுக்கு ஏன் வந்தன என்று செய்தி விசாரித்த போது, கார்களின் உரிமையாளர்கள் அங்குள்ள முத்தூஸ் கறி உணவகத்தில் தேநீர் அருந்த வந்திருந்தனர் என்று அறிந்தோம். 

Top